தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சிவகார்த்திகேயன்.டாக்டர்,அயலா
நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் டாக்டர் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தை சிவகார்த்திகேயனின் SK ப்ரொடுக்ஷன்ஸ் மற்றும் KJR ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.யோகி பாபு,வினய்,டோனி,ஜாரா அர்ச்சனா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தெலுங்கில் கடந்த வருடம் நானி நடித்த கேங் லீடர் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான பிரியங்கா மோகன்.இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படத்தின் மூலம் இவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.இந்த படம் 2021 கோடை விடுமுறைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.இந்த படம் முதலில் மார்ச் 26ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது ஆனால் தேர்தல் நாடகவிருப்பதால் இந்த படத்தின் ரிலீஸை படக்குழுவினர் ரம்ஜானுக்கு ஒத்திவைத்தனர்.
இந்த படத்தில் புதிய பாடலுக்காக அனிருத்துடன் இணைவதாக அறிவு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார் இதனை மேற்கோள் காட்டி அனிருத் டாக்டர் பட பாடல் என்று தெரிவித்தார்.ஏற்கனவே இருவரும் மாஸ்டர் படத்தில் இணைந்து பட்டையை கிளப்பியது போல இந்த படத்திலும் மாஸாக ஒரு பாடல் ரெடி ஆகிறது என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
#Doctor 💉🔥 https://t.co/FJ2pGkjNmj
— Anirudh Ravichander (@anirudhofficial) March 20, 2021