தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.கடைசியாக பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியான ஹீரோ படத்தில் நடித்திருந்தார்.
இதனை தொடர்ந்து இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிகுமாருடன் அயலான்,கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் திலீப்குமாருடன் டாக்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.இந்த இரண்டு படங்களின் பர்ஸ்ட்லுக்கும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த இரண்டு படங்களின் ஷூட்டிங்குமே கொரோனவால் பாதிக்கப்பட்டுளள்து.
படங்களில் நடிப்பது மட்டுமின்றி கனா,நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளராகவும் சிவகார்த்திகேயன் இருந்துள்ளார்.இவர் தயாரிப்பில் உருவாகியுள்ள வாழ் திரைப்படம் கொரோனா பாதிப்பு சரியான பின் வெளியாகும் என்று தெரிகிறது.இதனை தவிர சில பாடல்களுக்கு படலாசிரியராகவும் பணியாற்றியுள்ளார் சிவகார்த்திகேயன்.
கொரோனா காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் பலரும் தங்கள் நேரங்களை சமூகவலைத்தளங்களில் செலவிட்டு வருகின்றனர்.சிவகார்த்திகேயன் ட்விட்டரிலும்,இன்ஸ்டாகிராமிலு
சமீபத்தில் ட்விட்டரில் 6 மில்லியன் ரசிகர்களை பெற்றிருந்தார் சிவகார்த்திகேயன்.இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் 2.5 மில்லியன் ரசிகர்களை பெற்று இன்ஸ்டாகிராமில் அதிகம் பின்தொடரப்பட்ட ரசிகர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார் சிவகார்த்திகேயன் முதல் இடத்தில் 2.7 மில்லியன் ரசிகர்களுடன் விஜய்சேதுபதி உள்ளார்.இந்த சந்தோசத்தை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.