சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் படம் அயலான்.இந்த படத்தை இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்குகிறார்.இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.24AM Studios இந்த படத்தை தயாரிக்கிறது.



யோகி பாபு,கருணாகரன்,ஈஷா கோபிகர்,பாலசரவணன் என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது.இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் சமீபத்தில் தொடங்கியது.



இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்.இது குறித்த ஒரு அறிக்கையை படத்தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது அதில் இந்த படத்தில் வேலைபார்க்கும் அனைவருக்குமே இந்த படம் ஒரு முக்கியமான படமாக அமையும் என்றும் படத்தின் கடைசி இரண்டுக்கட்ட படப்பிடிப்புகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.



இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் ,படத்தில் நிறைய கிராபிக்ஸ் காட்சிகள் இருப்பதால் இந்த வேலைகளும் உடனடியாக செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.