சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் படம் அயலான்.இந்த படத்தை இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்குகிறார்.இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.24AM Studios இந்த படத்தை தயாரிக்கிறது.

யோகி பாபு,கருணாகரன்,ஈஷா கோபிகர்,பாலசரவணன் என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது.இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் சமீபத்தில் தொடங்கியது.

இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருவதாக படக்குழுவினர் தற்போது பதிவிட்டுள்னர்.15 மணி நேரத்திற்கு மேலாக இந்த ஷூட்டிங் நடந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.