கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் தினமும் அதிகரித்து வருகிறது.இதனை அடுத்து நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு மக்கள் பத்திரமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இருந்தாலும் நோயின் தாக்கம் குறைந்ததாக இல்லை.உலகத்தையே அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா வைரஸ் தாக்கம் எப்போது குறையும் என்று மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அனைத்து விதமான தொழில்களும் பாதித்துள்ளன.சினிமாத்துறையை பொறுத்தவரை திரையரங்குகள் மூன்று மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன.சினிமா,சீரியல் என்று அனைத்து விதமான ஷூட்டிங்குகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.சில இடங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு திரையரங்குகள் திறக்கப்பட்டன,ஷூட்டிங்குகள் ஆரம்பித்தன.

மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருப்பதாலும்,ஷூட்டிங்குகள் நடைபெறாததாலும் ஹிட்டான தொடர்களையும்,படங்களையும் டிவி சேனல்கள் போட்டி போட்டு ஒளிபரப்பி வருகின்றனர்.தற்போது ஒளிபரப்பாகி வந்த விறுவிறுப்பான தொடர்களையும் முதலில் இருந்து ஒளிபரப்பி வருகின்றனர்.பலரும் இந்த தொடர்களையும்,நிகழ்ச்சிகளையும்,படங்களையும் பார்த்து வருகின்றனர்.மூன்று மாதங்களுக்கு பிறகு ஷூட்டிங்குகள் தொடங்கி தற்போது சீரியல்களின் புதிய எபிசோடுகள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றன.இருந்தாலும் பலரும் வீட்டில் இருந்தே வேலை பார்ப்பதால் சீரியல்களோடு சேர்ந்து மக்கள் ரசிக்கும்படியான நிகழ்ச்சிகளையும்,படங்களையும் ஒளிபரப்பி வருகின்றனர்.

அதிகம் மக்களால் பார்க்கப்பட்ட தொடர்கள் மற்றும் படங்களின் லிஸ்டை BARC நிறுவனம் வாராவாரம் வெளியிட்டு வந்தனர்.கடந்த வாரத்திற்கான லிஸ்டை BARC தற்போது வெளியிட்டுள்ளது.சன் டிவியில் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பான சூர்யாவின் சிங்கம் 2 திரைப்படம் 99.67 லட்சம் பார்வையாளர்களுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.இதனை தொடர்ந்து சனிக்கிழமை ஒளிபரப்பான தனுஷின் பட்டாஸ் திரைப்படம் 88.63 லட்சம் பார்வையாளர்களுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.இதனை தொடர்ந்து டிவி தொடர்களான ரோஜா,யாரடி நீ மோகினி ,கல்யாண வீடு தொடர்கள் அடுத்த மூன்று இடங்களை பிடித்துள்ளன.

@TamilTvExpress Week 34 data: Tamil Programmes .For custom viewership data, visit https://t.co/CT4Nvm2Rub pic.twitter.com/ECq5fdVF5t

— BARCIndia (@BARCIndia) September 3, 2020