தமிழகத்தின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் STR.கடைசியாக சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து STR , ஹன்சிகா நடிக்கும் மகா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.வெங்கட் பிரபுவின் மாநாடு,பத்துதல,கெளதம் மேனன் இயக்கத்தில் நதிகளிலே நீராடும் சூரியன்,நடிகர் சங்கத்திற்காக ஒரு படம் என்று செம பிஸியாக இருக்கிறார் சிம்பு.

STR என்ன செய்தாலும் அவரை பற்றி என்ன செய்தி வந்தாலும் அது வைரலாகி விடும்.சமீபத்தில் சிம்புவின் ட்ரான்ஸபார்மேஷனை பார்த்து பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகி வரும் மாநாடு படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன்,எஸ்.ஜே.சூர்யா,பாரதிராஜா.எஸ்.ஏ.சந்திரசேகர் என்று பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.யுவன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.சுரேஷ் காமாட்சி இந்த படத்தை தயாரித்து வருகிறார்.

மாநாடு படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் ஷூட்டிங்கில் விறுவிறுப்பாக கலந்துகொண்டு வந்தார் சிம்பு.இந்த படத்தின் இறுதிக்கட்ட சில நாட்கள் படப்பிடிப்பு மட்டும் மீதம் உள்ளது என்று வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார்.இந்த படத்தின் டப்பிங் வேலைகள் லாக்டவுனுக்கு முன் தொடங்கியது.

இந்த படத்தின் முதல் பாடல் வரும் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது.தற்போது இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்ற சூப்பர் அப்டேட்டை வெங்கட் பிரபு தெரிவித்துள்ள்ளார் விரைவில் அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீசுக்கு ரெடியாகும் என்று தெரிகிறது.இந்த படத்தின் எடிட்டருக்கு இது 100வது படம் என்ற தகவலையும் வெங்கட் பிரபு பகிர்ந்துள்ளார் அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

May you all be blessed with love, peace and prosperity...Happy Eid😊#EidMubarak and to all #str fans!! #maanaadu post production work is on full swing!! So kindly hold on!! All the updates will follow once the movie is ready!! #spreadlove @SilambarasanTR_ pic.twitter.com/9I7oYLTCT7

— venkat prabhu (@vp_offl) July 21, 2021

We started our careers together! And still strong together!! So proud and happy to announce #maanaadu is @Cinemainmygenes ‘s 100th film!! #Chennai600028 was his 1st #Masss was his 50th
And now #maanaadu is his 100th!Looking forward for more collaborations! God bless #pkl100 pic.twitter.com/7gLdkZtql6

— venkat prabhu (@vp_offl) July 21, 2021