கோலிவுட்டில் வித்தியாசமான ஸ்கிரிப்ட்டுகளை தேர்தெடுத்து அதில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தும் ஹீரோக்களில் ஒருவர் சிபிராஜ். அறிமுக இயக்குனர் அன்பு இயக்கத்தில் இவர் நடித்துள்ள படம் வால்டர். இதில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். சிபிராஜூக்கு ஜோடியாக நடிகை ஷிரின் கான்ச்வாலா நடித்துள்ளார்.

ரித்விகா, சனம் ஷெட்டியும் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். 11:11 நிறுவனத்தின் சார்பாக இப்படத்தை டாக்டர் பிரபு திலக் தயாரித்துள்ளார். படத்தின் சில காட்சிகள் கும்பகோணத்தில் படமாக்கப்பட்டது. நடிகர் நட்டி நட்ராஜ் மற்றும் சமுத்திரக்கனி முக்கிய ரோலில் நடிக்கின்றனர். தர்ம பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

படத்தின் டீஸர் மற்றும் ஜுக் பாக்ஸ் சமீபத்தில் வெளியாகி அசத்தியது. தற்போது இப்படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகவுள்ளது.