தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகிகளில் ஒருவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். கன்னடா, தமிழ், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார். இவன் தந்திரன், விக்ரம் வேதா, ரிச்சி, கே13 போன்ற படங்களில் நடித்து அசத்தினார். புஷ்கர் - காயத்ரி இயக்கிய பிளாக்பஸ்டர் படமான விக்ரம் வேதா படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். அதில் இடம்பெற்ற யாஞ்சி பாடல் ஹிட்டாக, தமிழ் ரசிகர்களின் மனதில் நெஞ்சாத்தியாக இடம் பிடித்து விட்டார் ஷ்ரத்தா.
கடந்த ஆண்டு ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு சிறப்பான வருடம் என்றே கூறலாம். தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் போல்டான பாத்திரத்தில் நடித்து அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அருள் நிதி நடித்த கே13 மற்றும் தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான ஜெர்ஸி திரைப்படம் இவரின் திரைப்பயணத்தில் முக்கிய மைல்-கல்லாக அமைந்தது.
இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் புல்லட் பைக்கை ஓட்டும் போது கீழே விழுந்த வீடியோவை பகிர்ந்துள்ளார் ஷ்ரத்தா. அவரது பதிவில், இந்திய சினிமாவில் போல்டான பெண் என்றால் பைக் ஓட்ட வேண்டும் என்பது எழுதப்படாத விதி என்கிற ரீதியில் ஒரு பதிவை செய்து வைரலாக்கி உள்ளார். இதில் கொடுமை என்னவென்றால், அந்த புல்லட்டில் இருந்து நான் கீழே விழுந்த நிலையில், என்னை யாரும் கண்டு கொள்ளவில்லை, புல்லட்டுக்கு எந்த சேதமும் ஆகவில்லையா என்பதை தான் அனைவரும் பார்த்தார்கள் என்பதை கூறிவிட்டு, ராயல் என்ஃபீல்டு ஏன் இவ்ளோ வெயிட்டா இருக்கு என பதிவிட்டுள்ளார்.
லாக்டவுன் முடிவதற்குள் புல்லட் ஓட்ட கற்றுக்கொள்ளுங்கள் என்று பதிவு செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
விஷால் நடிக்கும் சக்ரா திரைப்படம் மற்றும் மாதவன் நடிக்கும் மாறா போன்ற படங்களில் முக்கிய ரோலில் நடிக்கிறார் ஷ்ரத்தா.