XB நிறுவனம் தயாரிக்க, தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கி வருகிறார். மாளவிகா மோஹனன் முக்கிய ரோலில் நடிக்கிறார். படத்தின் மூன்று போஸ்டர்கள் வெளியாகி பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாகவிருப்பதால் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர் தளபதி ரசிகர்கள்.

அனிருத் இசையில் படத்தின் முதல் சிங்கிளான ஒரு குட்டி கதை பாடல் வெளியாகி 20 மில்லயன் பார்வையாளர்களை ஈர்த்தது. அருண் ராஜா எழுதிய இப்பாடல் வரிகளுக்கு விஜய் குரல் தந்துள்ளார். இப்படத்தில், ஸ்ரீமன், அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீநாத், நாகேந்திர பிரசாத், ரமேஷ் திலக் ஆகியோர் பலர் நடிக்கின்றனர்.

படத்தில் நடிகர் சாந்தனு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். தற்போது கல்லூரி விழா ஒன்றில் குட்டி கதை பாடலை ரசிகர்கள் முன்பு பாடி அசத்தியுள்ளார். நடிகர் சாந்தனு தீவிர தளபதி ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. தனது வசீகர குரலால் பாடி அரங்கத்தை அதிர வைத்துள்ளார். சமீபத்தில் வெளியான வானம் கொட்டட்டும் படத்திலும் அசத்தியிருந்தார் சாந்தனு.

Actor @imKBRshanthnu sings #KuttiStory Song❤️ Vera level Anna @actorvijaypic.twitter.com/GPZJwiWzmj

— 🅰️zeel🅰️N🅰️Sᴮⁱᵍⁱˡ (@AzeelAnas1) February 21, 2020