வானம் கொட்டட்டும் படத்திற்கு பிறகு தளபதி விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார் ஷாந்தனு. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தை XB பிலிம்ஸ் தயாரித்துள்ளது. மாஸ்டர் ஆடியோ லான்ச்சில் தளபதி விஜய்யுடன் ஷாந்தனு ஆடிய நடனத்தை யாரும் மறக்க முடியாது. நடனத்தால் அரங்கையே அதிர வைத்தனர். கொரோனா ஊரடங்கில் புதிதாக youtube சேனல் துவங்கிய ஷாந்தனு, மனைவி கிகியுடன் சேர்ந்து என்டர்டெயின் செய்து வந்தார்.

இந்த லாக்டவுனில் தன்னை ஓர் இயக்குனராகவும் செதுக்கிக் கொண்டார். கொஞ்சம் Corona Naraiyya காதல் எனும் குறும்படத்தை இயக்கினார். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது இந்த குறும்படம். அதன் பின் கெளதம் மேனன் இயக்கத்தில் ஒரு சான்ஸ் குடு பெண்ணே பாடலில் நடித்து பட்டையை கிளப்பினார்.

விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் இராவண கோட்டம். கண்ணன் ரவி தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்து வருகிறார். இந்தப் படம் முதற்கட்டப் படப்பிடிப்புடன் நிறுத்தப்பட்டது.

படத்தின் கதை தட்பவெப்பநிலையைப் பொறுத்தது என்றும், வருடத்துக்கு 3 மாதங்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த முடியும் என்றும் படக்குழு அறிவித்தது. மேலும், கொரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தார்கள். கடந்த ஆகஸ்ட் மாதம் இராவண கோட்டம் படத்தின் டைட்டில் லுக்கை வெளியிட்டனர் படக்குழுவினர்.

இந்நிலையில் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் நாயகி கயல் ஆனந்தியுடன் பைக்கில் செல்கிறார் ஷாந்தனு. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர், நீங்க தான இது..என்று ஷாந்தனுவை டேக் செய்துள்ளார். இதை பார்த்த ஷாந்தனு, ஏன் யா...இப்படிபப்ளிக்கா மாட்டி விடுவியா என்று நகைச்சுவையாக கேட்டுள்ளார்.

ஷாந்தனு கைவசம் முருங்கைகாய் சிப்ஸ் படம் உள்ளது. இந்த படத்தில் ஏதோ சொல்ல பாடல் வெளியாகி அசத்தி வருகிறது. தரன் இசையில் சித் ஸ்ரீராம் பாடிய இப்பாடல் ரொமான்டிக் பாடலாக அமைந்துள்ளது. ஸ்ரீஜர் இந்த படத்தை இயக்குகிறார். ஷாந்தனுவின் தந்தையும் பிரபல இயக்குனருமான பாக்யராஜ் முக்கிய ரோலில் நடிக்கிறார். ஷாந்தனு ஜோடியாக அதுல்யா ரவி நடிக்கிறார். இந்த படத்திற்கு மேஷ் சக்கரவர்த்தி ஒளிப்பதிவு செய்யவுள்ளார். லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பாக ரவீந்தர் சந்திரசேகர் மற்றும் ஃபர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ் சார்பாக சிவசுப்பிரமணியன், சரவணபிரியன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

Yen ya public ah ipdi maati vidre 😂🤣
Jus kidding , shooting for RK https://t.co/H5MaB2d0f2

— Shanthnu 🌟 ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) November 28, 2020