XB பிலிம்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள படம் மாஸ்டர். இந்த படத்தில் மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத்தின் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் பட்டையை கிளப்பி வருகிறது.

கொரோனா ஊரடங்கால் மாஸ்டர் ரிலீஸை தள்ளிப்போடும் நிலை உருவானது. விரைவில் இந்நிலையை கடந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி தளபதியை பெரிய திரையில் காண ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

இந்நிலையில் நடிகர் ஷாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில், மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய்யுடன் மேடையில் நடனமாடியது குறித்து பதிவு செய்துள்ளார். சாதாரண ஸ்டெப்ஸ் அது.. பாட்டுடன் ஒத்துப்போனது. மேடையில் தளபதி அந்த ஸ்டெப்ஸை ஆடியதால் தான் இன்று அனைவரும் அதை பின்பற்றி வருகின்றனர் என்று பதிவு செய்துள்ளார்.

It was a very normal Choreo which I did infact old stepu dhan but I’m happy it synced so well with the song & he did it on stage🤩 And now becuz of him , every one is doing this step 🤩🔥
Thank you na🤩💛 https://t.co/HQKnAwUzJv

— Shanthnu 🌟 ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) April 30, 2020