ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்களில் ஒன்று செம்பருத்தி.கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரமான பார்வதி கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.



பார்வதியாக நடித்து வரும் ஷபானா தான் இன்டர்நெட்,டிவி என்று எங்கு பார்த்தாலும் பேமஸ்.இவரது நடிப்பை பலரும் பாராட்டிவருகின்றனர்.மேலும் பல விருதுகளையும் அள்ளிக்குவித்து வருகிறார்.ஷபானா.தளபதி விஜயின் தீவிர ரசிகர்களில் ஒருவர் இவர்.



கொரோனா காரணமாக பழைய எபிசோட்கள் தற்போது ஒளிபரப்பட்டு வருகின்றன.சின்னத்திரை ஷூட்டிங்கிற்கு சில நாட்களுக்கு முன் அனுமதி வழங்கியதை அடுத்து.இந்த தொடரின் புதிய எபிசோடுகள் மிக விரைவில் ஒளிபரப்பாகவுள்ளன என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திரும்ப வந்துட்டோம். சின்ன திரைக்கு வர இன்னும் கொஞ்ச நாள் தான். Wait பண்ணுங்க.

Sembaruthi,
Tonight, 7.30pm#Sembaruthi #ZeeTamil pic.twitter.com/g210tCQwMb

— Zee Tamil (@ZeeTamil) June 3, 2020