றெக்க திரைப்பட புகழ் இயக்குனர் ரத்ன சிவா இயக்கத்தில் வெளியான திரைப்படம் சீறு. ஜீவா நாயகனாக நடித்த இப்படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் தயாரித்திருந்தார். டி.இமான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். வருண் முக்கிய ரோலில் அசத்தினார்.

ஜீவாவிற்கு ஜோடியாக ரியா சுமன் நடித்திருந்தார். நவ்தீப் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்த இந்த படத்திற்கு லாரன்ஸ் கிஷோர் எடிட்டிங் செய்துள்ளார். கே சம்பத் திலக் கலை இயக்கம் கொண்ட பணிகளை கவனித்துக்கொண்டார். குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் படமாக சீறு அமைந்தாலும். விமர்சன ரீதியாக பல சரிவுகளை சந்தித்தது.

தற்போது படத்திலிருந்து செவ்வந்தியே பாடல் வீடியோ வெளியானது. நொச்சிபட்டி திருமூர்த்தி பாடிய இந்த பாடல் வரிகளை பார்வதி எழுதியுள்ளார்.