கதைத்தேர்வில் எப்போதும் வித்தியாசம் காட்டும் நடிகர்களில் ஒருவர் ஜீவா.இவர் நடிப்பில் வெளிவந்த கொரில்லா திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இவர் 83 என்ற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.

இதனை அடுத்து இவர் ரெக்க பட இயக்குனர் ரத்னசிவா இயக்கத்தில் சீறு என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்துள்ளனர்.ரியா சுமன் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.சதிஷ் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் பாடல் ப்ரோமோ ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த பாடல் நாளை ஜனவரி 31ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

#KannalaPoduraaley from #Seeru! 😍@immancomposer's super-fun dance number releasing tomorrow! Stay tuned 💥💃

➡️ https://t.co/Rn14U5lRCO@JiivaOfficial @VelsFilmIntl @rathinasiva7 #SeeruFrom7thFeb pic.twitter.com/NpNwDZ4pmo

— Sony Music South (@SonyMusicSouth) January 30, 2020