தமிழ் திரையுலகில் சிறந்த இயக்குனராகவும், நடிகராகவும் தன்னை செதுக்கிக்கொண்டவர் சசிகுமார். கடந்த 2008-ம் ஆண்டு இவர் இயக்கி நடித்து வெளியான திரைப்படம் சுப்ரமணியபுரம். மதுரை வாழ்க்கை முறையைச் சரியாகப் படம் பிடித்தமைக்காக பெரிதும் பாராட்டப்பட்ட இத்திரைப்படம். ஜெய், சுவாதி, சமுத்திரக்கனி, கஞ்சா கருப்பு ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் இசை அமைத்திருந்தார்.

இளைஞர்களை ஒரு சில அரசியல்வாதிகள் எவ்வாறு தங்கள் சுயநலத்திற்காகப் பயன்படுத்துகின்றனர் என்பது குறித்தும், காதல் மற்றும் நட்பில் உள்ள துரோகங்களையும் எடுத்துக்காட்டும் விதமாகவும் இப்படம் இயக்கப்பட்டிருந்தது. படத்தில் இடம்பெற்ற கண்கள் இரண்டால் பாடல் இன்று வரை அனைவரின் ஃபேவரைட். இப்படம் வெளியாகி இன்றோடு 12 ஆண்டுகள் நிறைவடைகிறது.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் பாலாவிடமும் அமீரிடமும் உதவி இயக்குனராகப் பணியாற்றி சினிமா கற்று வந்தவர். அடுத்தடுத்து நடிகராகவும் இயக்குனராகவும் உச்சம் தொட்டிருக்கிறார், இப்போது இந்த படம் வெளியாகி இன்றுடன் 12 வருடங்களாகி விட்டன.

இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில், ஜூலை 4-ம் தேதி, இந்த நாளை எப்படி மறக்க முடியும்? 12 வருடம் ஆகிவிட்டது. கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் மொத்தக் குடும்பமும் ஆர்வத்துடன் அமர்ந்திருந்தது. எங்கள் முதல் தயாரிப்பின் ரிசல்ட்டை காண என்று கூறியுள்ளார். இப்பதிவுடன் புகைப்படத்தையும் இணைத்து பகிர்ந்துள்ளார். சசிகுமாரை பாராட்டி மீண்டும் இயக்கவாருங்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் கொம்பு வச்ச சிங்கம்டா, அறிமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கத்தில் ராஜவம்சம், பொன்ராம் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் மகன், பாக்கியராஜின் முந்தானை முடிச்சு ரீமேக் போன்ற படங்கள் சசிகுமார் கைவசம் உள்ளது.

How can I forget this day, 4th of July.. 12 years ago.. when the entire family of Company Productions was sitting anxiously.. to know the result of our maiden production #12YearsOfSubramaniapuram pic.twitter.com/QUDm1Oi7Mb

— M.Sasikumar (@SasikumarDir) July 4, 2020