தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் Sarileru Neekevvaru.இந்த படத்தை Anil Ravipudi இயக்கியிருந்தார்.ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இந்த படம் வசூலிலும் சாதனை புரிந்தது.இதனை அடுத்து தனது 36ஆவது படத்தில் மஹரிஷி பட இயக்குனர் வம்சியுடன் இணைகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.

இதனை தொடர்ந்து இவர் கீதா கோவிந்தம் பட இயக்குனர் பரசுராம் உடன் தனது 37ஆவது படத்தில் நடிக்கிறார்.இந்த படத்தை மகேஷ் பாபுவின் GMB ப்ரொடுக்ஷன்ஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.Sarkaru Vaari Paata என்று இந்த படத்திற்கு டைட்டில் வைத்துள்ளனர்.இந்த படத்தின் ப்ரீலுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார் என்றும் முக்கிய வேடத்தில் நிவேதா தாமஸ் நடிக்கிறார் என்று தகவல்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.இது குறித்து படக்குழுவினர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

கொரோனா காரணமாக வீட்டிலேயே இருப்பதால் பிரபலங்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.மகேஷ்பாபுவும் தனது மகள் மற்றும் மகனுடன் விளையாடும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பகிர்ந்து வந்தார்.சமீபத்தில் மகேஷ் பாபு ட்விட்டரில் ஒரு 10 மில்லியன் ரசிகர்களை பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை படைத்திருந்தார்.இவர் தனது மகனுடனும்,மகளுடனும் வெளியிட்ட வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகி வந்தன.

Sarkaru Vaari Paata படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது.இதில் மகேஷ்பாபுவின் மனைவி மற்றும் அவரது மனைவி இருவரும் படக்குழுவினருடன் கலந்துகொண்டனர்.மகேஷ்பாபுவின் மகள் கிளாப் அடிக்க,மகேஷ்பாபுவின் மனைவி கேமராவை ஆன் செய்து வைத்தார்.இந்த படத்தின் ஷூட்டிங் ஜனவரி 2021 முதல் வாரத்தில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Super star @urstrulymahesh & @KeerthyOfficial starrer #SarkaruVaariPaata Pooja took place today!

Regular shoot commences from 1st Week of Jan 2021

Clap by #SitaraGhattamaneni
Camera Switched on by #NamrataMahesh@ParasuramPetla @MusicThaman @GMBents @14ReelsPlus pic.twitter.com/HmUGBLMCmr

— Mythri Movie Makers (@MythriOfficial) November 21, 2020