சாரா அலிகான் பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானின் மகள் ஆவார். இவர் கேதார்நாத் படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஜோடியாக அறிமுகமானார். தொடர்ந்து ரன்வீர் சிங் ஜோடியாக சிம்பா படத்தில் நடித்தார். இப்போது ஆனந்த் எல்.ராய் இயக்கி வரும் அட்ரங்கி ரே படத்தில் நடிக்கிறார். தனுஷ் மற்றும் அக்‌ஷய்குமார் நடிக்கும் இந்த படத்திற்கு ஏ.அர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். ஹிமான்ஷு ஷர்மா கதை எழுதியுள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் வரும் அக்டோபர் மாதம் மீண்டும் துவங்கவுள்ளது என சமீபத்தில் அறிவித்தனர் படக்குழுவினர். இந்த படத்தின் ஷுட்டிங் கடந்த மார்ச் மாதமே துவங்கி நடைபெற்று வந்தது. வாரணாசியில் சில முக்கிய இடங்களில் ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவ துவங்கியதால்
ஷூட்டிங் நிறுத்தப்பட்டு விட்டது. அதனை தொடர்ந்து வரும் அக்டோபர் மாதம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை படக்குழு துவங்கவுள்ளது.

தமிழகத்தில் மதுரையில் இந்த ஷுட்டிங் துவங்கவுள்ளது என்ற சுவையூட்டும் தகவலும் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி மற்றும் மும்பையில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளார். தொடர்ந்து இடைவெளியில்லாமல் மூன்று மாதங்களுக்கு படப்பிடிப்பை நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம். இந்த படப்பிடிப்பில் சாரா அலி கான் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் ஆனந்த் எல் ராய், இந்த லாக்டவுன் நேரத்தில் நான் அதிக நேரம் எடுத்துக் கொண்டு இனி நடக்க உள்ள ஷூட்டிங்கிற்காக தயாராகி வந்தேன். இந்த படப்பிடிப்பில் அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து தான் நடத்த உள்ளோம் என்று கூறியுள்ளார். இப்படியிருக்க தனுஷ் மற்றும் சாரா அலிகான் இருவரும் இருக்கும் புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வாரணாசியில் முதல் கட்ட ஷூட்டிங் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படமாகும். நமக்கு கிடைத்த தகவலின் படி, அத்ரங்கி ரே படத்தில் சாரா அலி கான் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். படத்தின் கதை இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் நடப்பது போல காட்டப்பட்டு இருக்குமாம்.

இந்நிலையில் சாரா அலிகானின் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைக்கண்ட சாராவின் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அவர் கையில் வைத்திருக்கும் பலூன் பொம்மையும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

The calm before the storm... ☔️🤷‍♀️ Nothing will ruin Sara or Uni’s form 🦄 😈 Weather will change, rain will transform 🌧 🌞 🌈 We will embrace it, be ourselves and not conform 🔮💟☮️

A post shared by Sara Ali Khan (@saraalikhan95) on