சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் டிக்கிலோனா. கார்த்திக் யோகி இந்த படத்தை இயக்கி வருகிறார். சினிஷ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் சந்தானம் 3 கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார்.

யோகி பாபு, அனகா, ஷிரின் ஆனந்த் ராஜ், முனீஸ்காந்த், மொட்டை ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன், ஷாரா, அருண் அலெக்ஸாண்டர் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். மேலும் தமிழ்த் திரையுலகில் நடிகராக அறிமுகமாகவுள்ளார் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங். படப்பிடிப்பு அனைத்துமே முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

மூன்று நாட்களுக்கு மூன்று போஸ்டர்கள் வெளியிடுவதாக படக்குழுவினர் தெரிவித்தனர். தற்போது மூன்றாம் போஸ்டர் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. இந்த போஸ்டரில் சந்தானம் அருகே ஐன்ஸ்டீன் கெட்டப்பில் யோகிபாபு உள்ளார். சந்தானம் மற்றும் யோகிபாபுவின் காமெடியை காணவிருக்கும் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக இருக்கும் என்றே கூறலாம்.