XB பிலிம்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள படம் மாஸ்டர். இந்த படத்தில் மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத்தின் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் பட்டையை கிளப்பி வருகிறது.

கொரோனா ஊரடங்கால் மாஸ்டர் ரிலீஸை தள்ளிப்போடும் நிலை உருவானது. விரைவில் இந்நிலையை கடந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி தளபதியை பெரிய திரையில் காண ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

சின்னத்திரை சூப்பர்ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் சஞ்சீவ். தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பரான இவர், விஜய்யுடன் இணைந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். மாஸ்டர் படத்திலும் முக்கிய ரோலில் நடித்துள்ளார். படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் இன்று முதல் துவங்கவுள்ளதென சஞ்சீவ் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

Thank you all nanbar Thalapathy fans 🙏🏻🙏🏻🙏🏻 Read all your comments & overhelmed with your lovely support. #Master Post Production works getting started from Tommorow 👍🏻👍🏻👍🏻
Stay Home Stay safe!! Love u all ❤️❤️ pic.twitter.com/fnm04APxzM

— Sanjeev (@SanjeeveVenkat) May 11, 2020