கடந்த 2008-ம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கிய வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. அதைத்தொடர்ந்து அசல், வெடி, வேட்டை போன்ற படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, பெங்காலி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து அசத்தினார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் வர்தே என்பவரை திருமணம் செய்தார் சமீரா. இந்த அழகான தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனையடுத்து லாக்டவுன் நேரத்தில் குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில் மகள் நைரா சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டைலில் கண்ணாடி அணியும் வீடியோவை பகிர்ந்துள்ளார். வீடியோவை கண்ட ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். விரைவில் சமீரா படங்களில் கம்பேக் தருவாரா என்ற கேள்வியையும் கேட்டு வருகின்றனர்.

Mass baby 😎 #babyThalaivaa #rajnikanth #superstar 🙏🏼 "Summa pere ketta athrudula” @rajinikanth 🤩 #naughtynyra #10monthsold 🎈#itsmybirthday #baby #milestone 🎂

A post shared by Sameera Reddy (@reddysameera) on