தென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்துவருபவர் சமந்தா.சூப்பர் டீலக்ஸ்,ஓ பேபி,மஜிலி படங்களின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.இதற்கிடையே தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் முடித்திருந்தார்.



திருமணத்திற்கு பிறகு தனக்கு முக்கியத்துவமுள்ள படங்களில் நடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.ஒரு வெப் சீரிஸிலும் நடித்துள்ளார் அது விரைவில் வெளியாகவுள்ளது.இவர் நடிப்பில் தயாராகியுள்ள 96 ரீமேக் திரைப்படம் சமீபத்தில் வெளியானது.



இன்று இவரது பிறந்தநாளை முன்னிட்டு இவரது கணவர் நாக சைதன்யா சமந்தாவிற்காக ஒரு கேக் செய்துள்ளார்.இந்த வீடீயோவை சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.