ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ஜகமே தந்திரம். இதில் ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், சஞ்சனா நட்ராஜன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்த இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

லண்டன், சென்னை, மதுரை போன்ற பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. படத்தின் விநியோக பங்குதாரராக ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்துள்ளது. படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பியது. பாடல்களும் தயார் நிலையில் உள்ளதாக தெரிகிறது. மே 1-ம் தேதியான நேற்று வெளியாகவிருந்த இப்படம் கொரோனா காரணமாக தள்ளிப்போனது.

இந்நிலையில் தனுஷ் உடன் ரோமன் ஃபியோரி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் தனுஷ் கிடா மீசையில் தாறுமாறாக இருக்கிறார். புகழ் பெற்ற தியேட்டர் ஆர்ட்டிஸ்டான ரோமன் ஃபியோரி, சிறந்த எழுத்தாளரும் கூட. ஜகமே தந்திரம் படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.