வினோத் இயக்கத்தில் அஜித்தின் 60-வது படமாக உருவாகி வருகிறது வலிமை. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஒரு வருடத்திற்கும் மேலாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் படத்தின் டைட்டில் வலிமை என்பதைத் தவிர படத்தை பற்றிய எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாததால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். படக்குழு சரியான நேரத்தில் அறிவிப்பு வரும் என்று தெரிவித்திருந்தாலும் பிரதமர் தொடங்கி, முதல்வர், விளையாட்டு பிரபலங்கள் என பலரிடமும் அப்டேட் கேட்டு வருகின்றனர் அஜித்தின் தீவிர ரசிகர்கள்

இதையடுத்து விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும் என தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்தார். அதேபோல் இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா அஜித்தின் ஓபனிங் பாடலை முடித்திருப்பதாகவும், விக்னேஷ் சிவன் எழுதியிருக்கும் அந்தப் பாடல் குத்துப் பாடலாக அமைந்திருப்பதாகவும் ஒடிசாவிலிருந்து ட்ரம்ஸ் கலைஞர்களை அழைத்து வந்து பணியாற்றி இருப்பதாகவும் தெரிவித்தார்.

யுவன் இசையமைத்திருக்கும் வலிமை படத்தின் பாடலை தான் கேட்டதாகவும், தல அஜித்துக்காக காத்திருப்பது வொர்த் தான் எனவும் பிரபல இசையமைப்பாளர் தமன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் அஜித் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

வலிமை தொடர்பான தகவல்களை படக்குழு எப்போது வெளியிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். எனவே இந்திய பிரதமர் தொடங்கி அனைவரிடமும் அப்டேட் கேட்டு சொல்லுமாறு கோரிக்கை வைத்தனர். இதைப்பார்த்த நடிகர் அஜித், சிலர் செய்து வரும் செயல்கள் தன்னை வருத்தமடைய செய்வதாகவும், அறிவித்தபடி படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும். அதுவரை பொறுமை காத்திருங்கள் என்று அறிக்கை வாயிலாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் வலிமை ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவரது பதிவில் தல வேற லெவல் ஆக்ஷன் என்று குறிப்பிட்டுள்ளார். ஆர்.கே.சுரேஷ் கைவசம் விசித்திரன் படம் உள்ளது.

#valimai cameraman Nirav Shah ....thala Vera level action in valimai 👌👌👌👌👌 pic.twitter.com/c7r0m55nwx

— RK SURESH (@studio9_suresh) February 28, 2021