பிரபல Radio தொகுப்பாளராக இருந்து ,சினிமாவில் காமெடியனாக மாறி LKG படத்தின் மூலம் ஹீரோவாக வளர்ந்து நிற்பவர் RJ பாலாஜி.இவர் ஹீரோவாக நடித்த LKG திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்திருந்தது.

இதனை தொடர்ந்து RJ பாலாஜி நயன்தாராவுடன் இணைந்து மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கிறது.இந்த படத்தின் மூலம் RJ பாலாஜி இயக்குனராக அறிமுகமாகிறார்.

இந்த படத்தின் ரிலீஸ் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.படங்களை தாண்டி சமூகப்பிரச்னைகளுக்கும் RJ பாலாஜி எப்போதும் குரல் கொடுப்பார்.தற்போது மக்கள் மத்தியிலும்,மாணவர்கள் மத்தியிலும் உள்ள பெரிய பிரச்சனை ஆன்லைன் கிளாஸ்.இதனால் மாணவர்கள் பலரும் கஷ்டப்படுகின்றனர் என்றும் அதற்கு தன்னால் என்னவெல்லாம் மாற்றங்கள் செய்யலாம் என்பது குறித்து RJ பாலாஜி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.

A post shared by RJ Balaji (@irjbalaji) on