தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் மாஸ்டர். இப்படத்தில், மாளவிகா மோகனன், ஸ்ரீமன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீநாத், நாகேந்திர பிரசாத், ரமேஷ் திலக் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

டெல்லி கல்லூரியில் நடந்த படப்பிடிப்பில் VJ ரம்யா, 96 புகழ் கௌரி கிஷன் போன்றோர் நடித்தனர். ஷிவமோகா படப்பிடிப்பு முடிந்து தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. மக்கள் செல்வன் விஜய்சேதுபதி அரசியல் வாதியாக நடிக்கிறார் என்று பேசப்படுகிறது. படத்தின் மூன்று போஸ்டர்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. படத்தின் விநியோக உரிமையை செவென் ஸ்க்ரீன் ஸ்டுடியோ கைப்பற்றியுள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஏப்ரல் மாதம் வெளியாகும் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

நெய்வேலி படப்பிடிப்பு தளத்திலிருந்து நடிகர் விஜய் ரசிகர்களை நோக்கி கையசைத்து செல்ஃபி எடுத்துக்கொண்டது இணையத்தில் வைரலாகி வருகிறது. நாளையுடன் நெய்வேலி படப்பிடிப்பு முடியவுள்ளதாக நெருங்கிய திரை வட்டாரம் மூலம் தகவல் வெளியானது. தற்போது படத்தில் பணிபுரியும் இயக்குனர் ரத்னகுமார், மாஸ்டர் அப்டேட் எப்போது வரும் ? சத்தியம் செய்து தாருங்கள் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் கேட்டு பதிவு செய்துள்ளார்.