XB பிலிம்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இணைந்து நடித்துள்ள படம் மாஸ்டர். லாக்டவுன் அறிவிப்பதற்கு முன்பே படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதிக எதிர்பார்ப்பில் உள்ள இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் முடிந்தது.

மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், தீனா, சேத்தன், கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. சமீபத்தில் பாடல்களின் கரோக்கி வெர்ஷனும் வெளியானது. ஏப்ரல் 9-ம் தேதி தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக மாஸ்டர் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் அதிகம் பரவிய காரணத்தினால் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன.

அதனால் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தயாரிப்பாளர் தள்ளி வைத்துள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டு தான் இருக்கின்றன. மீண்டும் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்பது பற்றிய விவரமும் தெளிவாக இல்லை. மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரும் நடிகர் விஜயின் மாமாவுமான சேவியர் பிரிட்டோ, சமீபத்தில் படத்தின் ரிலீஸ் குறித்து பேசியிருந்தார். மாஸ்டர் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர், என்ன நடந்தாலும் அப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என்பதை தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து மாஸ்டர் திரைப்படம் ஓடிடி-ல் வெளியாக வாய்ப்பில்லை, திரையரங்கில் தான் வெளியாகும் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உறுதி செய்தார். இந்நிலையில் லோகேஷ் கனகராஜின் நண்பரான, இயக்குனர் ரத்னகுமார் மாஸ்டர் திரைப்படம் குறித்து பதிவு ஒன்றை செய்துள்ளார். அவரது பதிவில், நாம் போராட வேண்டியது தியேட்டர் கவுன்ட்டருடன் மட்டுமே இன்றி OTT உடன் அல்ல. இதையே நல்ல ஒரு அப்டேட்டாக எடுத்துக்கொண்டு... என்று பதிவிட்டுள்ளார். ரத்னகுமாரின் இந்த ட்வீட்டை பார்த்த தளபதி ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

கடந்த 2017-ம் ஆண்டு மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் ரத்னகுமார். வைபவ், பிரியாபவானி மற்றும் இந்துஜா நடிப்பில் வெளியான இந்த ரொமான்டிக் காமெடி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பிறகு 2019-ம் ஆண்டு அமலா பால் வைத்து ஆடை எனும் படத்தை இயக்கினார். மாஸ்டர் திரைப்படத்தில் திரைக்கதை எழுத்தாளராக பணிபுரிந்துள்ளார்.

நாம் போராட வேண்டியது தியேட்டர் Counter ருடன் மட்டுமே இன்றி OTT உடன் அல்ல. இதையே நல்ல ஒரு Update ஆக எடுத்துக்கொண்டு....
😊🙏 #Master pic.twitter.com/gDhzAeuU0a

— Rathna kumar (@MrRathna) September 23, 2020