சித்து பிளஸ் 2 படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை சாந்தினி. தொடர்ந்து பில்லா பாண்டி, வில் அம்பு, கட்டப்பாவ காணோம், மன்னர் வகையறா, ராஜா ரங்கூஸ்கி உள்ளிட்ட படங்களில் சாந்தினி நடித்துள்ளார்.

சாந்தினி இருவீட்டார் சம்மதத்தோடு நடன இயக்குனர் நந்தாவை 2018ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து அசத்தி வருகிறார் சாந்தினி.விஜய் டிவியில் ஒளிபரப்பான தாழம்பூ என்ற தொடரின் மூலம் சீரியல்களில் அறிமுகமானார் சாந்தினி.இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஜீ தமிழின் சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்றான ரெட்டை ரோஜா தொடரில் சில மாதங்களுக்கு முன் ஹீரோயினாக இணைந்தார் சாந்தினி.இந்த தொடரில் இவரது நடிப்பு பலராலும் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.அக்ஷய் கமல் இந்த தொடரின் நாயகனாக நடித்துள்ளார்.இந்த தொடர் 400 எபிசோடுகளை கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

தற்போது இந்த தொடரில் விஜய் டிவியில் சூப்பர்ஹிட் அடித்த பொம்முக்குட்டி அம்மாவுக்கு தொடரின் ஹீரோயினாக நடித்து அசத்திய ராஷ்மிதா இந்த தொடரில் புது எண்ட்ரியாக வருகிறார் இதனை தனது இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார்.இவருக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

View this post on Instagram

A post shared by ❤️🌹RasH🌹❤️ (@rashmitha_roja)