தென்னிந்திய திரையுலகில் பிஸியாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்களால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார். தெலுங்கு திரையுலகம் தவிர்த்து தமிழிலும் பிரபலமாக திகழ்கிறார். மகேஷ் பாபு நடித்த சரிலேறு நீக்கெவரு படத்தில் இவரது குறும்புத்தனமான நடிப்பு ரசிகர்களை பெரிதளவில் ஈர்த்தது.

சுல்தான் திரைப்படத்தில் ராஷ்மிகாவின் நடிப்பை காண ஆவலில் உள்ளனர் திரை ரசிகர்கள். பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்துள்ளார் ராஷ்மிகா. இதுவே இவர் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. அதோடு சுல்தான் திரைப்படம் ஏப்ரல் 2-ம் தேதி ரிலீசாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிரடி மாஸ் மசாலா பொழுதுப்போக்கு படமான இதில் ராமச்சந்திர ராஜு, லால் பால், நெப்போலியன் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கியமான துணை வேடங்களில் நடிக்கின்றனர்.

சுல்தான் படத்தின் ட்ரைலர் மற்றும் ப்ரோமோக்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் பின்னணி இசையை யுவன் ஷங்கர் ராஜாவும், பாடல்களுக்கான இசையை விவேக் - மெர்வினும் அமைத்துள்ளார்கள்.

சென்சாரில் சுல்தான் படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ராஷ்மிகா மற்றும் கார்த்தியின் துள்ளலான ரொமான்ஸ் காட்சிகள் ப்ரோமோவை சிறப்பிக்கிறது.

இந்நிலையில், வைல்ட் டாக் படத்திற்காக புதிய சேலஞ்சை மேற்கொண்டிருக்கிறார் ராஷ்மிகா. அதில் புஷ்-அப் எடுத்தபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்ட் அடித்து வருகிறது. ராஷ்மிகாவின் ஃபிட்னஸ் லெவல் பலே என பாராட்டி புகழாரம் சூட்டி வருகின்றனர் நெட்டிசன்கள்.

If my love for you is a crime, I want to be the most wanted criminal.@iamRashmika #RashmikaMandanna love you soo much re🌹❤️ pic.twitter.com/6gy9P5WYTt

— Rashmika Mandanna Forever (@MyHeartRashmika) March 26, 2021