ஜீவா தனது முதல் பாலிவுட் படமான 83-ல் நடித்து வந்தார்.1983-ல் உலகக்கோப்பை வென்ற கிரிக்கெட் அணியை பற்றி உருவாகியுள்ளது.இந்த படத்தில் தமிழக வீரர் கிறிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா நடித்துள்ளார்.ரன்வீர் சிங் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் வேடத்தில் நடித்துள்ளார்.தீபிகா படுகோனே இந்த படத்தில் ரன்வீருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்த படத்தை கபீர் சிங் இயக்கியுள்ளார்.இந்த படம் ஏப்ரல் 10ஆம் தேதி 2020 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் தமிழ் திரையரங்க உரிமையை உலகநாயகன் கமல்ஹாசன்,ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து கைப்பற்றியுள்ளனர்.

இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.கொரோனா வைரஸின் தாக்கத்தால் இந்த படத்தில் ரிலீஸ் ஒத்திவைக்கப்படுகிறது என்று படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

இந்த படம் நிச்சயம் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் ரசிகர்களுக்கு நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர்.ஜூன் 4ஆம் தேதி இந்த படம் அனைத்து மொழிகளிலும் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இந்த படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

June 4th, 2021 !!!! 🏏🏆
in Hindi, Tamil, Telugu, Kannada and Malayalam.
See you in cinemas !!! #ThisIs83
.@ikamalhaasan @iamnagarjuna @kabirkhankk @deepikapadukone @Shibasishsarkar #SajidNadiadwala @vishinduri pic.twitter.com/Wv6dqvPJdi

— Ranveer Singh (@RanveerOfficial) February 19, 2021