ரசிகர்களின் ஃபேவரைட் இயக்குனர்களில் ஒருவர் பிரபு சாலமன். அவர் இயக்கத்தில் கிங், லீ, கொக்கி, லாடம் போன்ற படங்கள் வெளியாகின. 2010-ம் ஆண்டு வெளியான மைனா திரைப்படம் பிரபு சாலமனின் கம்பேக் என்றே கூறலாம். கும்கி, தொடரி, கயல் என தொடர்ந்து ஹிட் படங்களை தந்தார். சிறந்த இயக்குனரான இவர், சீரான தயாரிப்பாளரும் கூட. சட்டை, ரூபாய் ஆகிய படங்களை தயாரித்திருக்கிறார்.

தற்போது பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா நடிப்பில் உருவாகியுள்ள படம் காடன். ராணாவுடன் இணைந்து விஷ்ணு விஷால், புல்கிட் சாம்ராட், சோயா ஹுசைன், அஸ்வின் ராஜா, டின்னு ஆனந்த் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் உள்ள இந்தப் படத்தை ஈராஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்தியா முழுக்க உள்ள காடு சார்ந்த பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் ஒரே சமயத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. புல்கிட் சாம்ராட், சோயா ஹுசைன், விஷ்ணு விஷால், அஸ்வின் ராஜா, டின்னு ஆனந்த் உள்ளிட்ட பலர் ராணாவுடன் நடித்துள்ளனர். மூன்று மொழிகளிலுமே நாயகனாக ராணாவும், உடன் நடித்திருப்பவர்கள் வெவ்வேறு கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.

2020-ம் ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி வெளியீடு என்று படக்குழு அறிவித்தது. ஆனால், கொரோனா அச்சுறுத்தலால் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் தமிழகம் தவிர்த்த இன்னும் பல மாநிலங்களில் 50% இருக்கைக்குத்தான் அனுமதி அளிக்கப்பட்டதால், காடன் வெளியீடு தாமதப்படுத்தப்பட்டது.

அதனையடுத்து காடன் படம் மார்ச் 26-ம் தேதி வெளியாகும் என்று காடன் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் இப்படம் வெளியாகவுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் சுமார் ஓராண்டு கழித்து இந்தப் படம் வெளியீட்டுக்குத் திட்டமிடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக ஏ.ஆர்.அசோக் குமார், இசையமைப்பாளராக சாந்தனு மொய்த்ரா, ஒலி வடிவமைப்பாளராக ரசூல் பூக்குட்டி மற்றும் எடிட்டராக புவன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்தியா மற்றும் தாய்லாந்து காடுகளில் பெரும் பொருட் செலவில் படமாக்கப்பட்டது.

இந்நிலையில் படத்திற்கான டப்பிங் பணிகளை நிறைவு செய்தார் ராணா. தெலுங்கு, தமிழ், ஹிந்தி போன்ற மொழிகளில் டப்பிங்கை முழு மூச்சாக நிறைவு செய்தார். அருகில் இயக்குனர் பிரபு சாலமன் உள்ளார். இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

#RanaDaggubati begins dubbing for #HaathiMereSaathi/#Aranya/#Kaadan... Releasing in cinemas on 26th March 2021 in #Hindi, #Tamil, and #Telugu pic.twitter.com/KI1UEk3y13

— Sacnilk Entertainment (@SacnilkEntmt) February 14, 2021