மக்களால் மிகவும் விரும்பப்பட்ட தொகுப்பாளர்கள் பட்டியலில் ரம்யாவுக்கு முக்கிய இடம் உண்டு. டிடி-க்கு பிறகு விஜய் தொலைக்காட்சியில் பெண் தொகுப்பாளர்களில் பெரிதும் விரும்பப்பட்டவர். சினிமாவில் இரண்டாம் கட்ட கதாபாத்திரங்களில் நடித்து வந்த ரம்யாவுக்கு அடுத்து ஒரு ஹீரோயின் சான்ஸ் கிடைத்தது. இவர் நடிப்பில் வெளிவந்த ஆடை, கேம் ஓவர் போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.

எப்போதும் போட்டோஷூட்கள், உடற்பயிற்சி வீடியோக்கள் என சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கிறார் ரம்யா. கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுனில் தன்னை மெருகேற்றிக்கொள்ளும் பணிகளில் ரம்யா தீவிரமாக இறங்கியிருந்தார். நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த போதும் சரி, இப்போது சினிமா உலகத்தில் காலடி எடுத்து வைத்துள்ளபோதும் சரி, வடிவமைப்பாளர் வடிவமைத்து தரும் வித விதமான உடைகளில்தான் ஒவ்வொரு புகைப்படத்திலும் காட்சியளிக்கிறார்.

சமீபத்தில் சிலம்பம் சுற்றி இணையவாசிகளை கவர்ந்தார். இந்நிலையில் ரம்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்பெஷலான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். சிறு வயதில் கன்னத்தில் கை வைத்தபடி போஸ் தந்துள்ளார் ரம்யா. இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், ரம்யாவின் ஃபேவரைட் போஸ் இதுவாக இருக்குமோ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார் ரம்யா.

XB பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், தீனா, சேத்தன், கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. கொரோனா ஊரடங்கால் மாஸ்டர் ரிலீஸை தள்ளிப்போடும் நிலை உருவானது. மாஸ்டர் திரைப்படம் நிச்சயம் திரையரங்கில் தான் வெளியாகும் என்ற ருசிகர செய்தியை சமீபத்தில் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ உறுதி செய்தார்.

இசை வெளியீட்டு விழாவில் தளபதியுடன் பணிபுரிந்த அனுபவம் பற்றியும், மாஸ்டர் படத்தின் எதிர்பார்ப்புகள் குறித்தும் பேசினார் ரம்யா. மாஸ்டர் ஷூட்டிங்கின் போது, தளபதி இவரின் குரலை பாராட்டியதாகவும், படப்பிடிப்பு முழுவதும் மேடம் என்று தான் அழைத்ததாகவும் செய்திகள் இணையத்தில் வெளியாகின.

Guess who 🐒🙈 !?#MajorThrowback pic.twitter.com/JMwGeeEBW9

— Ramya Subramanian (@actorramya) August 26, 2020