கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது.இதன் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது.இதனால் பலரும் வேலையின்றி,உணவின்றி கஷ்டப்பட்டு வருகின்றனர்.பலரும் தங்களால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனவால் கஷ்டப்படும் மக்களுக்கு ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்தவர்களும் தங்களால் முடிந்தளவு உதவிகளை செய்து வருகின்றனர்.இது குறித்து ரஜினிகாந்த் தற்போது ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் கொரோனா வைரஸ்‌ தொற்றால்‌ அவதிப்பட்டுக்‌ கொண்டிருக்கும்‌ ஏழை, எளிய மக்களுக்கு இடைவிடாமல்‌ தங்களது உதவிகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும்‌ ரஜினி மக்கள்‌ மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும்‌ எனது மனமார்ந்த பாராட்டுகளையும்‌ மகிழ்ச்சியையும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

அடிபட்ட உடனேயே அதிக வலி தெரியாது. இப்போது நமக்குப் பட்டிருக்கும்‌ கொரோனா எனும்‌ அடி சாதாரண அடி அல்ல.வல்லரசு நாடுகளையே கதிகலங்க வைத்திருக்கும் பிசாசுத்‌தனமான அசுர அடி. இப்போதைக்கு இது தீராது போல தெரிகிறது. இதனுடைய வலி வருங்காலங்களில்‌ பல விதங்களில்‌ நமக்குப்‌ பல கடுமையான வேதனைகளைத் தரும்‌.

உங்களது குடும்பத்தாரின்‌ எல்லாத் தேவைகளையும்‌ பூர்த்தி செய்து அவர்களைப் பாதுகாப்பதுதான்‌ உங்களது அடிப்படை கடமை. எந்த சூழலிலும்‌ சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும்‌, முகக்‌ கவசத்தை அணியாமலும்‌ இருக்காதீர்கள்‌.

ஆரோக்கியம்‌ போச்சுன்னா! வாழ்க்கையே போச்சு!! என்று அவர் தெரிவித்துள்ளார்.

#Thalaivar #Superstar #Rajinikanth's Statement On #CoronaVirus & How Important It Is To Take Precautionary Measures Also Appreciating The People Who Came Forward To Help Those In Need In The Time Of Crisis!@rajinikanth @SudhakarVM @rmmoffice pic.twitter.com/txNHQXj8nt

— RIAZ K AHMED (@RIAZtheboss) June 9, 2020