2017 டிசம்பர் 31ஆம் தேதி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு நிச்சயம் வருவேன் என்று ரசிகர்களுக்கு வாக்குறுதி அளித்தார்.இதனை அடுத்து 2 ஆண்டுகளாக தனது அரசியல் என்ட்ரி எப்போது என்பதை தெரிவிக்காமல் இருந்த ரஜினிகாந்த் இன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் தனது அரசியல் குறித்து மனம் திறந்துள்ளார்.

சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ரஜினி பேசியதாவது.நான் அரசியலில் வருவேன் என்று சொன்னபிறகு அரசியில் சிஸ்டத்தில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்று கூறியிருந்தேன்.அது குறித்த 3 முக்கிய திட்டங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.

1.கட்சிக்கு தேவையான பதவிகளை மட்டுமே வைத்துக்கொள்வது
திமுக,அதிமுக காட்சிகளில் பூத் கமிட்டி உள்ளிட்ட 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதவிகள் உள்ளன அவை தேர்தல் நேரத்தில் மட்டுமே தேவைப்படும்.

2.கட்சியில் பெரும்பான்மையாக இளைஞர்கள்
கட்சியில் 50% இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிப்பதாகவும்,மீதமுள்ள 50% தனது கட்சியில் உள்ள நல்லவர்கள்,பெண்கள்,முன்னாள் IAS,IPS அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு வாய்ப்பளிக்க உள்ளதாகவும்.இவர்களை வைத்து புது சக்தி,புதிய மாற்றம் ஏற்படுத்த ஒரு பாலமாக இருப்பேன்.

3.கட்சிக்கு ஒரு தலைமை,ஆட்சிக்கு ஒரு தலைமை
நமது தேசத்தில் பெரும்பாலும் கட்சி தலைவர்களே முதலமைச்சராகவும் இருக்கின்றனர்.யாரவது எதிர்த்து கேள்வி கேட்டால் உடனே அவர்களை கட்சியில் இருந்து நீக்கிவிடுவார்கள்.அப்படி இருக்காமல் கட்சிக்கு ஒரு தலைமை,ஆட்சிக்கு ஒரு தலைமை என்று தனித்தனியாக இருக்கும்.கட்சிக்குள் யார் தவறு செய்திருந்தாலும் கட்சி நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.

ரசிகர்கள் தன்னை அடுத்த முதல்வர் என்று கூப்பிடுவதை நிறுத்தவேண்டும்,தனக்கு முதல்வர் ஆசை எப்போதும் இருந்ததில்லை அப்படி இருந்திருந்தால் 1996-லேயே முதல்வர் ஆகியிருப்பேன்.நன்கு படித்த,சிந்தனையுடைய,தன்மானமுள்ளவரை முதல்வராக்கலாம்.

தமிழகம் இருபெரும் தலைவர்களை இழந்து பெரிய வெற்றிடத்தை பெற்றிருக்கிறது.இந்த இடத்தை பிடிக்க அசுரபலத்துடன் இரு காட்சிகள் காத்திருக்கின்றன.அவற்றை எதிர்க்க வேண்டுமானால் ஒரு அதிசயம் நடக்கவேண்டும்.அந்த அதிசயத்தை மக்கள் நிகழ்த்திக்காட்ட வேண்டும்.இளைஞர்களின் எழுச்சி நடந்தால் அசுரபலம் தூள் தூள் ஆகிவிடும்.

இளைஞர்கள் எழுச்சி நடைபெற்றால் நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்.தேர்தலில் ஓட்டை பிரிப்பதற்காக மட்டும் நான் கட்சி தொடங்கப்போவதில்லை.ஆட்சி மாற்றம் இப்போது நடக்கவில்லை என்றால் எப்போதும் நடக்காது என்று தெரிவித்தார்.