டிஸ்கவரி தொலைக்காட்சியின் பிரபலமான தொடர்களில் ஒன்று மேன் வெர்சஸ் வைல்ட்.இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் க்ரில்ஸ் உலகளவில் மிகவும் பிரபலமானவர்.காட்டுக்குள் தனியாக சுற்றித்திரியும் இவரது ஷோ மிகவும் வைரலானது.



கடந்த வருடம் இவர் பிரதமர் நரேந்திர மோடியுடன் நடத்திய மேன் வெர்சஸ் வைல்ட் சிறப்பு தொகுப்பு பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார்.இந்த படப்பிடிப்பு கடந்த மாதம் நடைபெற்றது.



தற்போது இந்த ஷோவின் மோஷன் போஸ்ட்டரை பியர் க்ரில்ஸ் வெளியிட்டுள்ளார்.இந்த ப்ரோமோ வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த ஷோ விரைவில் ஒளிபரப்பப்படும் என்றும் அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Preparing for @Rajinikanth’s blockbuster TV debut with an Into The Wild with Bear Grylls motion poster! I have worked with many stars around the world but this one for me was special. Love India. #ThalaivaOnDiscovery pic.twitter.com/kFnkiw71S6

— Bear Grylls (@BearGrylls) February 19, 2020