சென்னை தரமணியில் அமைந்துள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் கடந்த 2008 முதல் செயல்பட்டு வருகிறது.தொடங்கப்பட்டது முதலே இதற்கு முழுநேர இயக்குனராக எவரும் நியமிக்கப்படவில்லை



செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் முதல் இயக்குநராக முனைவர் ரா.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு ரஜினிகாந்த் நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.



அந்த கடிதத்தில் மரியாதைக்குரிய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அவர்களுக்கு,தமிழ் மொழிக்காக நீங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கும்,செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் இயக்குனரை நியமித்ததற்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.

மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்துக்கு புதிய இயக்குநரை நியமித்ததற்கு நடிகர் @rajinikanth நன்றி.

தமிழ் மொழியை மேலும் வலுப்படுத்தவும், இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு பாடுபட்டு வருவதாக அமைச்சர் @DrRPNishank பதில். pic.twitter.com/tvvI37qdfm

— RIAZ K AHMED (@RIAZtheboss) June 4, 2020