பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரைசா வில்சன். இதையடுத்து இவருக்கு சினிமா பட வாய்ப்புகள் குவிந்தன. ஹரிஷ் கல்யான் நடிப்பில் இலன் இயக்கிய பியார் ப்ரேமா காதல் படத்தில் இவர் ஹீரோயினாக அசத்தியிருந்தார். இத்திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ரைசா கைவசம் FIR, லவ், மற்றும் Alice போன்ற படங்கள் உள்ளது.

கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நேரத்தில் மக்கள் தங்கள் பணிக்கு திரும்பாமல் அவதி படுகின்றனர். திரைப்பிரபலங்களும் தங்கள் படப்பிடிப்பிற்கு செல்லாமல் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை ரைசா வில்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஹாய் என்று துவங்கியவர் இரண்டு முறை ஹாய் சொல்லி பின் பை சொல்லி விட்டார். இதனால் கமெண்ட்டில் விளையாடி வருகின்றனர் ரைசா ரசிகர்கள்.

🙋🏻‍♀️ pic.twitter.com/9WEWaeTwRl

— Raiza Wilson (@raizawilson) May 5, 2020