டான்ஸ் மாஸ்டராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஒரு நாயகனாக தன்னை உருவாக்கிக்கொண்டு பின்னர் முனி,காஞ்சனா படங்களின் மூலம் தன்னை ஒரு இயக்குனராகவும் நிரூபித்தவர் ராகவா லாரன்ஸ்.இவர் இயக்கி நடித்த காஞ்சனா 3 படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.



ஹிந்தியில் அக்ஷய் குமார் நடித்து வரும் காஞ்சனா படத்தின் ரீமேக்கை இயக்கிவருகிறார்.இதனை தொடர்ந்து இவர் ஹீரோவாக நடிக்கவுள்ள புதிய படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வெற்றிநடை போட்ட திரைப்படம் சந்திரமுகி.இந்த படத்தில் லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என்ற தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.



ரஜினியின் ஆசியுடன் இந்த படத்தில் நடிக்க உள்ளதாகவும்,இந்த படத்தை பி.வாசு இயக்குவார் என்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்ற தகவலை லாரன்ஸ் வெளியிட்டார்.மேலும் இந்த படத்திற்கு தான் வாங்கும் அட்வான்ஸ் தொகையில் இருந்து பிரதமர் நிவாரண நிதிக்கு 50 லட்சம்,முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்சம்,FEFSI தொழிலாளர்களுக்கு 50 லட்சம்,நடன கலைஞர்கள் யூனியனுக்கு 50 லட்சம்,மாற்றுத்திறனாளிகளுக்கு 25 லட்சம் மற்றும் தான் பிறந்து வளர்ந்த இடமான ராயபுரம் பகுதியில் இருக்கும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு 75 லட்சம் என்று மொத்தம் மூன்று கோடி ரூபாய் உதயவித்தொகையாக வழங்குவதாக தெரிவித்துள்ளார்.