1999-ல் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட சீரியல்களில் மிகவும் பிரபலமான ஒரு தொடர் சித்தி.கண்ணின் மணி என்ற டைட்டில் பாடலில் தொடங்கி 90'ஸின் மிகப்பெரிய ஹிட் தொடராக இந்த தொடர் இருந்தது.இந்த தொடரின் இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த தொடரிலும் ராதிகா ஹீரோயினாக நடிக்கிறார்.சித்தி 2 தொடரின் ஒளிபரப்பு ஜனவரி 27ஆம் தேதி முதல் தொடங்கியது.கொரோனா காரணமாக இந்த தொடுரின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது,இதனை தொடர்ந்து இந்த தொடரில் நடித்து வந்த பொன்வண்ணன்,நிகிலா,ஷில்பா உள்ளிட்ட சில முக்கிய கேரக்டேர்கள் சில காரணங்களால் மாற்றப்பட்டனர்.

ப்ரீத்தி ஷர்மா,நந்தன் லோகநாதன்,மீரா கிருஷ்ணன்,மஹாலக்ஷ்மி இந்த தொடரின் முன்னணி கதாபாத்திரங்களாக நடித்து வருகின்றனர்.பொன்வண்ணன் கேரக்டரில் நிழல்கள் ரவி நடிக்கிறார்,நிகிலா ராவ் நடித்து கதாபாத்திரத்தில் காயத்ரி யுவராஜ் நடிக்கிறார்,ஷில்பா நடித்து வந்த கதாபாத்திரத்தில் ஜெயலட்சுமி நடிக்கிறார்.

இந்த தொடர் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது,ராதிகா சில வாரங்களுக்கு முன் நடிப்பதில் இருந்து விலகி தனது கணவர் சரத்குமாருக்கு துணையாக அரசியலில் முழுநேரமாக இறங்கப்போவதாக தெரிவித்திருந்தார்.ராதிகா இன்னும் சில மாதங்கள் தொடர்ந்து நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர்.

தற்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக திடீரென்று தான் நடித்து வந்த சித்தி 2 தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும்,வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.தான் விலகினாலும் சித்தி 2 தொடர் தொடர்ந்து ஒளிபரப்பாகும் என்றும் ரசிகர்கள் தொடர்ந்து தங்கள் ஆதரவை தொடருக்கு தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Love to all my fans and well wishers ❤️❤️❤️❤️thanks for the unconditional love and loyalty. Keep watching #Chithi2 @radaantv My best is yet to come👍👍 pic.twitter.com/tB9dJdnb1U

— Radikaa Sarathkumar (@realradikaa) February 11, 2021

Mixed mood of happiness and a tinge of sadness as I sign off from #Chithi 2 &megaseials for now. Given the best of my years and hard work in @suntv Sad to say bye to all the technicians and costars. The show must go on good luck to Cavin, venba and Yazhini. 1/1 pic.twitter.com/rf7VMLrJRJ

— Radikaa Sarathkumar (@realradikaa) February 11, 2021