செய்தி வாசிப்பாளராக தனது பணியை தொடங்கி சீரியல் நடிகையாகவும்,நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக மாறியவர் ப்ரியா பவானி ஷங்கர்.இப்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.



இவர் நடிப்பில் வெளியான மேயாத மான்,கடைக்குட்டி சிங்கம்,மான்ஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்கள் சூப்பர்ஹிட் அடித்தன.இதனை தொடர்ந்து இந்தியன் 2,பொம்மை,pelli choopulu ரீமேக் உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார்.



தற்போது இன்ஸ்டாகிராமில் ப்ரியா பவானி ஷங்கர் ஒரு பதிவிட்டுள்ளார்.2013-ல் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்திற்கு பிறகு தான் எனக்கு செய்தி வாசிப்பாளராக வேலை கிடைத்தது என்றும் தனது காதலர் ராஜவேல் அன்று தான் தன்னைவிட்டு வெளிநாடு சென்றதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.இந்த நாளுக்கு பிறகு தான் தனது வாழ்க்கை மாறியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

This one from 2013 🤘🏼 what was I thinking 🤔 one of my little memories! I joined PuthiyaThalaimurai and it was the evening before the night @rajvel.rs left to Australia for a very very long time. Life has changed a lot from this evening 😊 #throwbackmemories

A post shared by Priya BhavaniShankar (@priyabhavanishankar) on