பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்ற நடிகர் பிரபாஸ்.இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகி ,இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தின.இதனை தொடர்ந்து பிரபாஸ் மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவான சாஹோ படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் வெளியாகி ரசிகர்களிடம் சுமாரன வரவேற்பை பெற்றிருந்தது.

சாஹோ படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடித்து வரும் படம் பிரபாஸ் 20.இந்த படத்தை ஜில் படத்தின் மூலம் பிரபலமான ராதாகிருஷ்ண குமார் இயக்குகிறார்.UV க்ரியேஷன்ஷுடன் இணைந்து கோபி கிருஷ்ணா மூவிஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

பூஜா ஹெக்டே இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார்.1970-ல் நடைபெறும் ரொமான்டிக் கதையாக இது இருக்கும் என்று தெரிகிறது.இந்த படத்தின் ஷூட்டிங் வெளிநாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.கொரோனா காரணமாக இந்த படம் குறித்த அறிவிப்புகள் பின்னர் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்

இந்த படத்திற்கு இசையமைக்க இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வரும் ஜூலை 10ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.இந்த பர்ஸ்ட்லுக் ரிலீஸை எதிர்நோக்கி பிரபாஸ் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

The announcement you all have been waiting for! Title & first look of #Prabhas20 will be out on 10.7.2020 at 10 AM🕺#Prabhas @hegdepooja @director_radhaa @UVKrishnamRaju garu @itsBhushanKumar #Vamshi #Pramod @PraseedhaU @UV_Creations @TSeries pic.twitter.com/64e4maW9us

— UV Creations (@UV_Creations) July 8, 2020