தமிழ் சினிமாவில் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான ஹாரிஸ் ஜெயராஜ் அறிமுகப்படுத்திய சிறந்த பாடகர்களில் ஒருவர் க்ரிஷ். உலகநாயகன் கமலஹாசன் , இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் நடித்த வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளிவந்த மஞ்சள் வெயில் பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமானவர்.

க்ரிஷ், தொடர்ந்து இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் “உன்னாலே உன்னாலே…” “ஜூன் போனால் ஜூலை காற்றே...” “அடியே கொல்லுதே…” “என் ஃப்ரண்ட போல யாரு மச்சான்…” உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

இசையமைப்பாளராகவும் உள்ள பாடகர் கிரிஷ் சமீபத்தில் தமிழ் கடவுள் முருகனை பற்றிய ஒரு ஆல்பம் பாடலை இசையமைத்து வெளியிட்டிருந்தார் அந்தப் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக தற்போது நிலவி வரும் இந்த கடுமையான காலகட்டத்தில் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு பாடல் ஒன்றை இசையமைக்க உள்ளார்.

அந்தப்பாடலை தமிழ்நாட்டின் பிரபல ஐபிஎஸ் அதிகாரிகளில் ஒருவரான SP Dr.சிவகுமார் IPS எழுதியுள்ளார். பிரபல ஐபிஎஸ் அதிகாரி எSP Dr.சிவகுமார் IPS எழுத க்ரிஷ் இசையமைத்து வெளிவரவுள்ள இந்த விழிப்புணர்வு பாடல் தற்போது தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. விரைவில் இந்த பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Music Director @krishoffl social awareness song on Vaccination💉
✍🏻 SP Dr. Sivakumar IPS for his gesture of writing the lyrics.
💰Produced by Sri Kanishk Collections, Arcot
📢 @donechannel1 pic.twitter.com/BGTcrxPDmP

— Galatta Media (@galattadotcom) June 2, 2021