இந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழும் நடிகை டாப்ஸி இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.

இந்திய திரையுலகின் உச்ச நட்சத்திரமான அமிதாப் பச்சன் உடன் இணைந்து நடிகை டாப்ஸி நடித்த பின்க் திரைப்படம் இந்திய அளவில் நடிகை டாப்ஸியை சிறந்த நடிகையாக உயர்த்தியது. தொடர்ந்து காசி அட்டாக், மிஷன் மங்கள், தப்பட் என பல பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

அடுத்ததாக இவரது நடிப்பில் உருவான ஹஸீன் தில்ரூபா திரைப்படம் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் OTT தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் நடிகை டாப்ஸி கதாநாயகியாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் இயக்குனர் மாற்றப்பட்டுள்ளார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் கேப்டனாக இருந்த கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் பயோபிக் திரைப்படமாக சபாஷ் மித்து திரைப்படம் உருவாக உள்ளது. வியாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் நடிகை டாப்சி மித்தாலி ராஜ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக சபாஷ் மித்து திரைப்படத்தை இயக்குனர் ராகுல் தொலக்யா இயக்குவதாக இருந்தது. தற்போது சில காரணங்களால் ராகுல் தொலக்யாக்கு பதிலாக பிரபல பாலிவுட் இயக்குனர் ஸ்ரீஜிட் முகர்ஜி இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.


SRIJIT MUKHERJI TO DIRECT TAAPSEE STARRER... #ShabaashMithu - the biopic on the life of #cricket legend #MithaliRaj - will now be directed by #SrijitMukherji... Initially, #RahulDholakia was directing the film... Stars #TaapseePannu... Produced by Viacom18 Studios. pic.twitter.com/YnedleLBw7

— taran adarsh (@taran_adarsh) June 22, 2021