தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்திகளில் ஒருவர் தளபதி விஜய்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடித்த மாஸ்டர் படம் கடந்த பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.கொரோனவை தொடர்ந்து வெளியான மாஸ்டர் படம் வசூலிலும் சாதனை படைத்தது.இதனை தொடர்ந்து தனது 65ஆவது படத்தில் நடித்து வந்தார் விஜய்.

இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.இந்த படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார்,அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.செல்வராகவன்,யோகி பாபு,மலையாள நடிகர் டாம் சாக்கோ,அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு Gerogia-வில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.கொரோனாவால் இந்த படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது.சில மாதங்களுக்கு முன் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது இந்த படத்தின் தற்போதைய Schedule முடித்துவிட்டு படத்தின் நாயகி பூஜா ஹெக்டே மும்பை திரும்பியுள்ளார்,மும்பை ஏர்போர்ட்டில் வந்திறங்கிய இவரது வீடியோ வைரலாகி வருகிறது அங்கு நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு விஜயுடன் நடிப்பது பெரும் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.

Its very good to be working with #ThalapathyVijay says our #Beast beauty #poojahegde! Papped at Mumbai, post wrapping shoot for her 3rd schedule in Chennai.@actorvijay @hegdepooja pic.twitter.com/4IunDK8fkS

— #BEAST (@BeastMovieoff) August 23, 2021