தெலுங்கில் டாப்சி, வெண்ணிலா கிஷோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற அனந்தோ பிரம்மா படத்தின் மறுபதிப்பாக உருவாகிருந்த படம் பெட்ரோமாக்ஸ். தமன்னா நாயகியாக நடித்திருந்தார். முழுக்க முழுக்க நாயகியை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும். அதே கண்கள் ரோஹின் வெங்கடேசன் இயக்கியிருந்தார்.

இந்தப் படத்தில் யோகி பாபு, முனீஸ் காந்த், சத்யன், காளி வெங்கட் என பலமான நகைச்சுவை பாத்திரங்கள் தமன்னாவுடன் இணைந்து நடித்தனர். இவர்களுடன் பேபி மோனிகா, ஸ்ரீஜா, வெங்கடேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் அசத்தினார்கள்.

அக்டோபர் 11-ம் தேதி இப்படம் திரைக்கு வந்த இப்படம் சரியாக ஓடவில்லை. மிகுந்த சோகத்திற்கு உள்ளாயினர் தமன்னா ரசிகர்கள். இதனைத்தொடர்ந்து தற்போது சலக்கு சலக்கு பாடல் வீடியோ வெளியானது. அருண் மொழி மற்றும் சுஜாதா பாடிய இந்த பாடல் வரிகளை ரவிஷங்கர் எழுதியுள்ளார்.