தமிழ் திரையுலகில் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் பா ரஞ்சித். அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமானவர் தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து கபாலி, காலா என இரண்டு படங்களை இயக்கினார். தற்போது ஆர்யா வைத்து சல்பேட்டா படத்தை இயக்கிவருகிறார்.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் பெரும் அச்சம் நிலவி வருகிறது. இதனால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனிடையே சென்னையில் காலமான மருத்துவரின் உடலை புதைக்க மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வைத்தியம் பார்க்கும் மருத்துவருக்கு இந்த நிலைமையா என பலரும் நினைத்தனர்.

இந்நிலையில் பா.இரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா தொற்றின் அச்சம் மக்களிடையே அதிமாகி கொண்டிருப்பதை, நோய்தொற்றால் இறந்த மருத்துவரை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததை கொண்டே புரிந்து கொள்ள முடியும். இச்சம்பவம் தன்னலமற்று உழைத்துக் கொண்டிருக்கும் மருத்துவர்களின் உள்ளத்தில் பெரூம் மன இறுக்கத்தையும் உண்டு பண்ணியிருக்கிறது. மருத்துவர்களின் மனநிலையை புரிந்து அவர்களின் வேதனையை போக்க துணை நிற்ப்போம். இறந்தவர்களின் உடலில் இருந்து நோய் தொற்று ஏற்படாது என்ற விழிப்புணர்வை உண்டாக்குவோம் என குறிப்பிட்டுள்ளார்.

1/கொரோனா தொற்றின் அச்சம் மக்களிடையே அதிமாகி கொண்டிருப்பதை, நோய்தொற்றால் இறந்த மருத்துவரை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததை கொண்டே புரிந்து கொள்ள முடியும். இச்சம்பவம் தன்னலமற்று உழைத்துக் கொண்டிருக்கும் மருத்துவர்களின் உள்ளத்தில் பெரூம் மன இறுக்கத்தையும் உண்டுபன்னிருக்கிறது.

— pa.ranjith (@beemji) April 22, 2020