அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங் நடித்துள்ள படம் ஓ மை கடவுளே. இந்தப் படத்தில் பிரபல தொலைக்காட்சி நடிகை வாணி போஜனும் நடித்துள்ளார். இவர்களுடன் கௌரவ பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். அக்சஸ் ஃபிலிம் ஃபாக்டரி இப்படத்தை தயாரித்துள்ளது. நேற்று இந்த படத்தின் ப்ரஸ் காட்சி திரையிடப்பட்டது. விமர்சகர்கள் மத்தியில் கலவையான வரவேற்பை பெற்றது இப்படம்.

படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் இளைஞர்கள் விரும்பும் வகையில் இடம்பெற்றுள்ளது. லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். விது அய்யனா ஒளிப்பதிவு செய்துள்ளார். U/A சான்றிதழ் வழங்கப்பட்ட இப்படம் நாளை பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தன்று திரைக்கு வரவுள்ளது.

இந்த படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை ஏ.பி.இன்டர்நேஷனல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என சமீபத்தில் தகவல் தெரியவந்தது. தற்போது இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.