2016-ல் தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா,ரித்து வர்மா நடிப்பில் வெளியாகி சக்கைபோடு போட்ட திரைப்படம் pelli choopulu.தருண் பாஸ்கர் இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கெளதம் மேனன் 2016-ல் கைப்பற்றி அவரே தயாரித்து வெளியிட திட்டமிட்டிருந்தார்.
பொன் ஒன்று கண்டேன் என்று பெயரிடப்பட்டிருந்த இந்த படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாகவும் தமன்னா ஹீரோயினாகவும் நடிக்கவிருந்தனர்.பின்னர் சில காரணங்களால் இந்த படம் கைவிடப்பட்டு,ரீமேக் உரிமையும் கைமாற்றப்பட்டது.A Studios LLP, A Havish Production, SP Cinemas, Madhav Media and Third Eye Entertainment இணைந்து இந்த படத்தின் ரீமேக் உரிமையை பெற்றனர்.
இந்த படம் புதிய குழுவோடு தொடங்கி படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்து ரிலீசுக்கு காத்துக்கொண்டிருக்கின்றனர்.அறி
ஓ மணப்பெண்ணே என்று இந்த படத்திற்கு படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இன்று ஹரிஷ் கல்யாணின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.அனிருத் பாடியுள்ள இந்த பாடல் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
You loved this sensational combo before, we hope this one'll top your playlists too🎶@anirudhofficial + @iamharishkalyan + @priya_Bshankar + @Composer_Vishal + @Lyricist_Vivek + ❤️❤️❤️ = #BodhaiKaname
— Think Music (@thinkmusicindia) June 29, 2021
Coming soon!#HBDHarishKalyan #OhManaPenne @KaarthikkSundar pic.twitter.com/bNeMmMIqPt