தமிழ் சினிமாவின் தரத்தை உலகளவில் உயர்த்தி பிடித்த நான்கு இயக்குநர்களான கௌதம் மேனன், சுதா கொங்குரா, வெற்றி மாறன், விக்னேஷ் சிவன் ஆகியோர் காதல், அந்தஸ்து, கௌரவம் என்கிற கருவை மையமாக வைத்து ஒரு ஆந்தாலஜி திரைப்படத்தை தமிழின் பெரு நட்சத்திரங்களின் நடிப்பில் நெட்ஃப்ளிக்ஸ்க்காக உருவாக்கியுள்ளார்கள்.

நெட்ஃப்ளிக்ஸ் ( Netflix ) நிறுவனம் தங்களது முதல் தமிழ் திரைப்படமான “பாவ கதைகள்” திரைப்படத்தை இன்று அறுவித்துள்ளார்கள். கௌதம் மேனன், சுதா கொங்குரா, வெற்றி மாறன், விக்னேஷ் சிவன் ஆகியோர் இந்த ஆந்தாலஜி திரைப்படத்தை இயக்கியுள்ளார்கள். பாவ கதைகள் காதல், அந்தஸ்து, கௌரவம் ஆகியவை நம் உறவுகளில் ஏற்படுத்தும் மாற்றங்களை கூறும் நான்கு அழகான கதைகளை ஆந்தாலஜி வகையில் சொல்லும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தினை ரோனி ஸ்க்ரூவாலா வின் RSVP Movies நிறுவனம் மற்றும் ஆஷி துவா சாராவின் Flying Unicorn Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளார்கள். நெட்ஃப்ளிஸ் Netflix நிறுவனம் தங்களது தளத்தில் இப்படத்தினை 190 நாடுகளில் ப்ரத்யேகமாக இப்படத்தினை வெளியிடுகிறது.

தமிழின் புகழ்மிகு பெரு நட்சத்திரங்களான அஞ்சலி, பவானி ஶ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், ஹரி, காளிதாஸ் ஜெயராம், சாந்தனு, கல்கி கொச்சிலின், பதம் குமார், பிரகாஷ் ராஜ், சாய் பல்லவி, மற்றும் சிம்ரனுடன் மேலும் பல முக்கிய நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்

படம் குறித்து கௌதம் வாசுதேவ் மேனன் கூறியது..."பாவ கதைகள்" படம் இயக்குநர்கள் வெற்றி மாறன், சுதா கொங்குரா, விக்னேஷ் சிவன் ஆகியோருடன் பணிபுரியும் எனது முதல் அனுபவம். கனமிக்க, மிகவும் சிக்கலான கருவை, மிகவும் நேர்மையுடன் வெளிப்படையாக இந்த பெரும் இயக்குநர்களுடன் இணைந்து கையாண்டு கதை சொன்ன இந்த அனுபவம் வெகு அற்புதமாக இருந்தது. இந்த ஆந்தலாஜி திரைப்படம் நாம் கொண்டிருக்கும் அந்தஸ்து, கௌரவம், சமூக கட்டமைப்புகள் தனிமனித சுதந்திரத்தை எந்த அளவு பாதிக்கிறது என்பதை கட்டுடைத்து காட்டுவதாக இருக்கும் என்றார்.

படம் குறித்து சுதா கொங்குரா கூறியது...இப்படத்தில் உள்ள ஒவ்வோரு கதைகளும் எந்த தடைகளும் இல்லாமல் நம் சினிமா வழக்கத்திற்கு மாறான கட்டுக்கடங்காத அன்பை கூறும் கதைகளாகும். மிக உயர்ந்த தரத்திலான இந்த படைப்பு இந்தியாவையும் கடந்து உலகம் முழுதும் உள்ள ரசிகர்களை Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் வழியே சென்றடைவது, பெரும் மகிழ்ச்சியை தருகிறது என்றார்.

படம் குறித்து வெற்றி மாறன் கூறியது...Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை உருவாக்கியது மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. கதை சொல்வதில் மட்டுமே எனது கவனம் இருந்தது. நான் நினைத்ததை எந்த தடங்கலும் இல்லாமல் சொல்ல முடிந்தது. படம் உருவாக்குவதில் "பாவ கதைகள்" திரைப்படத்தில் முழு சுதந்திரத்தை அனுபவைத்தேன். இப்படம் மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது என்றார்.

படம் குறித்து விக்னேஷ் சிவன் கூறியது...Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவன படைப்புகளின் தீவிர ரசிகன் நான். ஒரு படைப்பாளனாக மாறுபட்ட கதையினை, முழுதாக அங்கீகரிக்கும் மூன்று பெரும் இயக்குநருடன் இணைந்து கூறும் வாய்ப்பு மிகப்பெரிய பரிசாகும். இக்கதைகள் நம் தமிழ் சமூகத்தில் உறவுகளின் வேதனையளிக்கும் இருண்மை மிக்க பக்கத்தினை நாம் உணரும்படி வெளிச்சமிட்டு காட்டும் என்றார்.

Not freaking out or anything, but Paava Kadhaigal- a Tamil anthology directed by @menongautham, #SudhaKongara, @VetriMaaran and @VigneshShivN is coming to Netflix!

(Okay we are 100% freaking out!)@RSVPMovies @pashanjal @RonnieScrewvala @ashidua_fue @sahilmehra @_avinashv_

— Netflix India (@NetflixIndia) October 1, 2020