தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் பிரசாந்த் இயக்குனர் பாலுமகேந்திரா, இயக்குனர் மணிரத்தினம், இயக்குனர் ஷங்கர் என தமிழ் சினிமாவின் மிகப் பெரிய ஆளுமைகளாக விளங்கும் அனைத்து முன்னணி இயக்குனர்களுடனும் பணியாற்றியுள்ளார்.

அடுத்ததாக நடிகர் பிரசாந்த் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் அந்தகன். பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான அந்தாதூன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக தயாராகிவருகிறது அந்தகன் திரைப்படம். இத்திரைப்படத்தில் நடிகர் பிரசாந்த் பார்வையற்ற நபராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட தியாகராஜன் அந்தகன் திரைப்படத்தை இயக்குகிறார். பாலிவுட்டில் நடிகை தபு நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் நடிகை சிம்ரன் நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி, கே.எஸ்.ரவிக்குமார், நவரச நாயகன் கார்த்திக், ஊர்வசி, ப்ரியாஆனந்த், யோகி பாபு, மனோபாலா, மற்றும் வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு அந்தகன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதையடுத்து தற்போது டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று அந்தகன் படத்தின் டப்பிங் பணிகளில் நவரச நாயகன் கார்த்திக் இணைந்துள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விரைவில் அந்த படத்தின் டீஸர் & டிரெய்லர் என அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Navarasa Nayagan #Karthik starts dubbing for #Andhagan, *ing @actorprashanth@actorthiagaraja Directorial @Music_Santhosh @SimranbaggaOffc @thondankani @PriyaAnand #RaviYadhav #SenthilRaghavan @iYogiBabu #KSRavikumar #Oorvasi @manobalam @vanithavijayku1 @onlynikil pic.twitter.com/zKs5DYxpFk

— Nikil Murukan (@onlynikil) August 4, 2021