சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து இன்று தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளவர் நானி.இவர் நடிப்பில் கடந்த 2019-ல் வெளியான ஜெர்சி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து இவர் நடித்த கேங்லீடர் படமும் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து நானி வி,மற்றும் Tuck ஜெகதீஷ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.இவரது 25ஆவது படமான வி படத்தை Mohan Krishna Indraganti இயக்குகிறார்.இந்த படத்திற்கு வித்தியாசமாக V என்ற ஒற்றை எழுத்தில் படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்

இந்த படத்தில் நிவேதா தாமஸ் மற்றும் அதிதி ராவ் ஹயாத்ரி கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.அமித் திரிவேதி இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

நானி நடித்துள்ள வி படம் அமேசான் ப்ரைம்மில் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இருந்தாலும் நானி முதல்முறையாக நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார் ,இவரது நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

இதனையடுத்து டக் ஜெகதீஷ் படத்தின் ஷூட்டிங்கில் விறுவிறுப்பாக கலந்துகொண்டு வருகிறார் நானி.இவர் நடிக்கும் நானி 28 படத்தின் அறிவிப்பும் வெளியானது.தற்போது OTT-யில் வெளியான இவரது வி திரைப்படம் புத்தாண்டை முன்னிட்டு ஜனவரி 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.OTT-யில் நேரடியாக வெளியான பின் இந்தியாவில் திரையரங்குகளில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்றுள்ளது இந்த படம்.

VERYYY IMPORTANT DEVELOPMENT... #TELUGU CINEMA SHOWS THE WAY... Fresh development... A film that premiered on #Amazon in Sept 2020, will now release in *cinemas* OFFICIALLY... #Telugu film #VTheMovie - starring #Nani and #SudheerBabu - will arrive in *cinemas* on 1 Jan 2020. pic.twitter.com/pvyjFwYVwL

— taran adarsh (@taran_adarsh) December 24, 2020

#VTheMovie will be the FIRST prominent #Indian film to premiere on a digital platform first and release in *cinemas* subsequently. OFFICIALLY and LEGALLY.

— taran adarsh (@taran_adarsh) December 24, 2020